காதலர் தினத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து பல வகையான ரோஜா பூக்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டு தோறும் காதலர்கள் தினத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலிருந்து பல வகையான ரோஜா பூக்களை வாங்கி விற்பனை செய்வது வழக்கம். அதைப்போல் இந்த ஆண்டு நாளை கொண்டாடப்படும் காதலர் தினத்தை முன்னிட்டு ஓசூர், பெங்களூர், பாகலூர், உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஊட்டி ரோஸ், கிளாடி ரோஸ், ஜெர்ரிபுரா பின்க் ரோஸ், டார்க் பிங்க் ரோஸ், ஒயிட் ரோஸ், எல்லோ ரோஸ், உள்ளிட்ட 10 வகையான ரோஜா பூக்களை வாங்கி விற்பனைக்கு தயாராக வைத்துள்ளனர். இதனையடுத்து நாளை காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா பூக்கள் நல்ல விலைக்கு விற்கும் என்று வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.