Categories
தேசிய செய்திகள்

காதலர் தின பெயரில் வரும் ஆப்பு….. இதை யாரும் கிளிக் பண்ணிடாதீங்க….. காவல்துறை எச்சரிக்கை….!!

காதலர் தினத்தில் உங்களுக்கு விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என்ற விளம்பரம் ஏதாவது செல்போனில் வந்தால் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் பிப்ரவரி 14ஆம் தேதியன்று காதலர் தினம் கொண்டாடப்படும். காதலர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் மீது உள்ள அன்பை அன்றைய நாளில் வெளிப்படுத்திக் கொள்வதற்காக காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தங்கள் காதலர் (காதலிக்கு) விருப்பம் உள்ள பொருள்களை வாங்கிக் கொடுத்து, அவர்களின் விருப்பத்தை அன்றைய நாளில் பூர்த்தி செய்வார்கள். ஒவ்வொரு வருடமும் காதலர் தினத்தின் போது சிலர் ஆஃபர்கள் வழங்கப்படும். அதற்காக சில விளம்பரங்கள் வெளியிடப்படும். அதில் சில உண்மையும் உண்டு பொய்யான விளம்பரங்களும் உண்டு.

அதனைக் கண்டு யாரும் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி குறிப்பிட்ட நேரத்துக்குள் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளித்து செல்போன் மற்றும் விலையுயர்ந்த பரிசுப் பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம் என வரும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம். குறிப்பிட்ட லிங்க்- களை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் திருட கூடும். அதனால் உங்கள் வங்கிக் கணக்கில் இருந்த பணம் திருடப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |