இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .
தமிழ் திரையுலகில் போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நானும் ரௌடி தான் படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதன்பின் இவர் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கியிருந்தார் . தற்போது இவர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா, சமந்தா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர் .
https://www.instagram.com/p/CT9N9A9BznO/?utm_source=ig_embed&ig_rid=a98f4b2a-21f3-4512-be2a-7e0a230af696
இந்நிலையில் விக்னேஷ் சிவன் இன்று தனது பிறந்தநாளை தனது காதலியும், நடிகையுமான நயன்தாராவுடன் சிறப்பாக கொண்டாடியுள்ளார். மேலும் அவர் இது குறித்த புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நயன்தாராவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதையடுத்து விக்னேஷ் சிவனுக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.