திருமணம் குறித்து எழுந்த பல்வேறு வதந்திகளுக்கு நடிகை அனுஷ்கா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
திரைத்துறை என்று வந்தால் ஒவ்வொரு பிரபலமும் எந்த அளவுக்கு உச்சம் கொடுக்கிறாரோ அந்த அளவுக்கு அவதூறுகளும் , புரளியும் கிளம்புவது இயல்பு.புகழையே தொடாத நடிகர்-நடிகைகளும் கூட புரளியை சந்தித்திருப்பார்கள். அந்த வரிசையில் தொடர்ந்து தன் மீது ஒரு குறிப்பிட்ட விஷயம் சார்ந்த அவதூறு எழுப்பி வந்த நிலையில் அதற்கு சம்பந்தப்பட்ட நடிகையே முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் அனுஷ்கா. உச்ச நட்சத்திரங்களான அஜித், விஜய் , சூர்யா , ரஜினி போன்ற பிரபலங்களுடன் நடித்த அனுஷ்காவிற்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உண்டு.கடந்த சில நாட்களாக அவரின் திருமணம் குறித்து பல்வேறு புரளிகள் எழும்பி வருகின்றது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் படி பேட்டியளித்துள்ள அனுஷ்கா , இவர் தொழிலதிபர் , கிரிக்கெட் வீரர் , நடிகர் என எனக்கு பலமுறை திருமணம் செய்து வைத்துள்ளனர் என்று குறிப்பிட்ட அவர் சினிமாத்துறையில் கிசுகிசு வருவது இயல்பு தான் ஆனால் அது அதிகமாக வருவதுதான் வேதனையாக இருக்கின்றது என்று தெரிவித்த அவர் நான் யாரையும் காதலிக்கவில்லை, என்னுடைய பெற்றோர் யாருக்கு கை காட்டுகிறார்கள் அவருக்கு கழுத்தை நீட்டுவேன் என்று தெரிவித்துள்ளார்.