திண்டுக்கல்லில் காதலியை சந்திக்க சென்ற இளைஞரை கத்தியால் குத்திய பெண்ணின் தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் தாடிக்கொம்பு கிராமத்தை சேர்ந்த வினோத்குமார்(22) அதே பகுதியில் தனியார் நூற்பாலையில் வேலை செய்து வருகிறார். தன்னுடன் கல்லூரியில் படித்த பிள்ளையார் நத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகளான மோனிகாவை காதலித்து வந்துள்ளார். இருவருமே கல்லூரியிலிருந்தே காதலித்து வந்துள்ளனர். இந்த காதலுக்கு பெண்ணின் பெற்றோர் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து மோனிகாவை சந்திப்பதற்கு வினோத்குமார் கடந்த வெள்ளிக்கிழமை சென்றுள்ளார். இதனை அறிந்து கொண்ட மோனிகாவின் தந்தை செல்வராஜ் வினோத்குமார் வந்தவுடன் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரின் வயிற்றில் குத்தி உள்ளார். இதனால் வினோத்குமார் பலத்த காயம் அடைந்ததால் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.