காதலியை கத்தியால் குத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாட்டக்குளம் கிராமத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த 24 வயதுடைய பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதனால் அந்த பெண்ணின் பெற்றோர் பிரகாஷ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் காதலர்களை விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
அப்போது பிரகாஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் காதலியை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த பெண்ணை காவல்துறையினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் காவல்துறையினர் பிரகாஷை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.