பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் தனது காதலிக்கு கொடுத்த முத்தத்தால் மாட்டிக்கொண்டார்.
மெக்சிகோ நாட்டில் பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் பிரையன் டொனாசியானோ ஓல்குயின் பெர்டுகோ என்பவர் சுமார் 200 நாடுகளுக்கும் மேல் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக உள்ளார். இவரை 196 நாடுகளில் கைது செய்ய இன்டர்போலால் ரெட் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கலியில் உள்ள இயேசு கிறிஸ்துவின் மலை உச்சியில் பெர்டுகோ தனது காதலியுடன் உல்லாசமாக பொழுதை களித்துள்ளார். அப்போது அவர் தனது காதலிக்கி முத்தமிட்டு உள்ளார். இந்த புகைப்படங்களை காதலி தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளார். இந்நிலையில் புகைப்படங்கள் வைரலானதை தொடர்ந்து அமெரிக்க போதைப்பொருள் தடுப்பு நிறுவன அதிகாரிகள் கொலம்பியாவை எச்சரித்ததை அடுத்து பெர்டுகோ கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து போதைப்பொருள் தடுப்பு நிறுவன அதிகாரிகள் பெர்டுகோவை கைதுசெய்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தி உள்ளனர்.