Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

காதலிக்கு கொலை மிரட்டல்…. இளம்பெண்ணின் பரபரப்பு புகார்…. வாலிபரை கைது செய்த போலீஸ்…!!

காதலித்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மாந்தை கிராமத்தில் ஓட்டுநரான ஜோஸ்வா(28) என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சவுதியா என்ற பெண்ணை 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஜோஸ்வா பலமுறை அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். நேற்று முன்தினம் சவுதியா தனது காதலன் வீட்டிற்கு சென்று திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார்.

அப்போது திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததோடு, ஜோஸ்வா அந்த பெண்ணை கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் சவுதியா மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜோஸ்வாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |