தமிழ் திரைப்பட நடிகரான விஷ்ணு விஷால் முக்கிய அறிவிப்பு ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால், மேலும் ஜீவா, ராட்சசன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.கடந்த 2018 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட ரஜினி நட்ராஜை கருத்து வேறுபாட்டினால்விவாகரத்து செய்தார்.அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.பேட்மிட்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா உடன் விஷ்ணு விஷாலுக்கு காதல் ஏற்பட்டு இருவரும் காதலித்த நிலையில் ஜூவாலா கட்டா வின் பிறந்த நாளான இன்று விஷ்ணு விஷால் அவருக்கு மோதிரம் அணிவித்து திருமணம் செய்து கொள்வதை உறுதி படுத்தினார் என்ற முக்கிய அறிவிப்பை வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார்.
மேலும் டுவிட்டரில் கூறியிருப்பது” பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜீவாலா கட்டா வாழ்க்கையின் புதிய துவக்கம், நேர்மறையாக இருப்போம், நமக்கு, ஆரியனுக்கு, நம் குடும்பங்களுக்கு ,நண்பர்களுக்கு,நம்மை சுற்றியுள்ளவர்களின் நல்ல எதிர்காலத்துக்காக உழைப்போம்,அனைவரின் அன்பும், ஆசீர்வாதங்களும் எங்களுக்கு வேண்டும், நள்ளிரவில் மோதிரத்திற்கு ஏற்பாடு செய்த பசந்த் ஜெயினுக்கு நன்றிஎன பதிவிட்டுள்ளார்.இதையடுத்து திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன.