Categories
மதுரை மாவட்ட செய்திகள்

காதலிக்கு நிச்சயம் செய்த பெற்றோர்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள கோச்சடை முத்தையா கோவில் தெருவில் பாண்டியன்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்துள்ளார். இந்த கடையில் வேலை பார்த்த ஒரு பெண்ணும் பாண்டியனும் காதலித்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அடுத்து அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் உடனடியாக அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடத்த நிச்சயம் செய்தனர்.

இதனால் மன உளைச்சலில் இருந்த பாண்டியன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாண்டியனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |