செல்போன்களை திருடிய வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் பகுதியில் அப்துல் முனார்ப் என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இவருடைய காதலிக்கு கடந்த மாதம் 28-ஆம் தேதி பிறந்த நாள் வந்துள்ளது. இதன் காரணமாக அப்துல் தன்னுடைய காதலிக்கு பிறந்தாளுக்கு பரிசாக விலை உயர்ந்த செல்போனை கொடுக்க வேண்டும் என நினைத்துள்ளார். இதன் காரணமாக ஜேடிபி நகர் பகுதியில் உள்ள ஒரு மிகப்பெரிய செல்போன் ஷோரூமுக்கு அப்துல் சென்றுள்ளார். அந்த செல்போன் ஷோரூமை ஊழியர்கள் பூட்டும் நேரத்தில் அப்துல் பாத்ரூமுக்குள் சென்று மறைந்து கொண்டார். இதனையடுத்து கடையில் இருந்த விலை உயர்ந்த 7 செல்போன்களை அப்துல் திருடிவிட்டு மறுநாள் காலை கடை திறக்கும் வரை பாத்ரூமுக்குள் மறைந்து இருந்துள்ளார்.
இந்நிலையில் மறுநாள் காலை கடை திறந்த பிறகு பாத்ரூமுக்குள் மறைந்து இருந்த அப்துல் கடையை விட்டு வெளியே சென்றுள்ளார். அதன் பிறகு கடை ஊழியர்கள் ஒரு செல்போன் கீழே கிடப்பதை பார்த்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் ஒரே ஒரு செல்போன் மட்டும் எப்படி கீழே விழுந்தது என்பதை ஆராய்ந்த போது கடையில் இருந்த சில செல்போன்கள் திருடப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செல்போனில் உள்ள ஐஎம்இஐ நம்பரை வைத்து செல்போன் இருக்கும் நம்பரை கண்டுபிடித்தனர். மேலும் அப்துலை கைது செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் காதலிக்காக செல்போன்களை திருடியது தெரிய வந்தது. மேலும் கடையிலிருந்து திருடப்பட்ட 6 செல்போன்களை அப்துல் தன்னுடைய காதலியிடம் கொடுத்துவிட்டு ஒரு செல்போனை அவர் பயன்படுத்தி வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.