காதலியை கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி அருகே அத்தியூர்திருக்கை கிராமத்தில் ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயசங்கரி என்ற மகள் இருக்கிறார். இதே பகுதியில் சடையன் என்பவர் வசித்து வருகிறார். இவரும் ஜெயசங்கரியும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் சடையன் ஜெயசங்கரிடம் ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசம் அனுபவித்துள்ளார். இதன் காரணமாக ஜெய சங்கரி கர்ப்பமாக இருந்துள்ளார்.
இதை தெரிந்து கொண்ட ஜெயசங்கரியின் பெற்றோர் சடையனின் சகோதரியிடம் சென்று முறையிட்டுள்ளனர். இதற்கு சடையனின் சகோதரி இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த 23-ஆம் தேதி ஜெயசங்கரிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் குழந்தை பிறந்த பிறகு சடையன் ஜெயசங்கரியை திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜெயசங்கரியின் தாயார் சாந்தி விழுப்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சடையனை கைது செய்துள்ளனர்.