காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயமான காரணத்தினால் காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், அம்மையன் பட்டி கிராமத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர் ஈரோடு மாவட்டம் பகலாயூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அங்கு சிவகங்கையை சேர்ந்த பெண் ஒருவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இந்த காதல் விவகாரம் அறிந்த அப்பெண்ணின் பெற்றோர்கள் அவருக்கு வேறு ஒருவருடன் திருமணத்தை நிச்சயித்து உள்ளனர்.
இதனால் மனமுடைந்து போன கார்த்திக் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு அந்த பெண்ணை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளனர். அதற்கு அந்தப் பெண் மறுப்பு தெரிவித்து விட்டதால் விரக்தியடைந்த அவர் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்ட சக ஊழியர்கள் அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.