Categories
தேசிய செய்திகள்

காதலிக்க மறுத்த இளம் பெண்…. முகத்தில் பாட்டிலால் 25 கீரல்…. காமுகனின் கொடூர செயல்…. அதிர்ச்சி….!!!!

கேரள மாநிலத்தில் உள்ள ஆம்பூரில் கத்தினாக்கள் என்ற பகுதியை சேர்ந்த சோனு என்ற 20 வயது இளம்பெண் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்துவிட்டு சென்னை கீழம்பாக்கத்தில் உள்ள பிரபல உணவகத்தில் கடந்த மூன்று மாதங்களாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சென்னையை சேர்ந்த நவீன் என்ற இளைஞருக்கும் இவருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நட்பு ரீதியாக பழகி வந்த நிலையில் நவீன் சோனுவை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். நட்பாக பழகியதை நவீன் தவறாக புரிந்து கொண்டதால் சோனு கொஞ்சம் கொஞ்சமாக அவரை விட்டு விலகி உள்ளார். ஆனால் இது நவீனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்திய நிலையில் சோனுவுக்கு போன் செய்து நவீன் மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்நிலையில் காதலிக்க வற்புறுத்தி மறைத்து வைத்திருந்த பாட்டிலை உடைத்து சோனுவின் முகத்திலும் கழுத்து மற்றும் வயிறு உள்ளிட்ட பல இடங்களிலும் சரமாரியாக தாக்கியுள்ளார். சோனுவின் முகத்தை சிதைக்கும் எண்ணத்தில் பல இடங்களில் கொடூரமாக குத்தினார். தற்போது சோனு மிக மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து நவீனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Categories

Tech |