Categories
தேசிய செய்திகள்

காதலிக்க மறுத்த இளம் பெண்…. 49 முறை கத்தியால் குத்தி கொன்ற இளைஞர்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

ஒடிசா மாநிலத்தில் புவனேஸ்வர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னுடைய காதலியை 49 முறை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஜகநாத் கோடா என்ற இளைஞர் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.

ஆனால் அந்தப் பெண் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்ததால் அவரை குஜராத்திற்கு மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்ற அந்த இளைஞர் 49 முறை குத்தி கொலை செய்துவிட்டு உடலை யாருக்கும் தெரியாத இடத்தில் தூக்கி எறிந்து விட்டு தப்பி சென்று விட்டார். இதனைத் தொடர்ந்து சிசிடிவி உதவியுடன் போலீசார் குற்றவாளியை கண்டறிந்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் ஒரு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |