Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

காதலிக்க மறுத்த பள்ளி மாணவி…. வாலிபரின் கொடூர செயல்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

காதலிக்க மறுத்த மாணவியின் கழுத்தை வாலிபர் கத்தியால் அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி மாணவிகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் அதிகரித்து கொண்டே செல்கிறது. சில பேர் காதல் என்ற பெயரில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கின்றனர். அதிலும் சிலர் காதலிக்க மறுக்கும் மாணவிகளை கொலை செய்ய முயற்சி செய்கின்றனர். அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சென்ன சமுத்திரம் மோட்டூர் கிராமத்தில் மார்க்கண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயகுமார் என்ற மகன் உள்ளார். இவர் 11-ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் பனப்பாக்கத்தில் இருக்கும் உறவினர் வீட்டில் மகளை தங்க வைத்துள்ளனர். இதனை அறிந்த விஜயகுமார் மாணவியை பார்ப்பதற்காக 2 முறை அங்கு சென்றுள்ளார். இதற்கிடையே தந்தை வீட்டிற்கு வந்த மாணவி கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாலை நேரத்தில் மேய்ச்சலுக்கு சென்ற மாடுகளை வீட்டிற்கு ஓட்டி வந்துள்ளார். அப்போது திடீரென வந்த விஜயகுமார் தன்னை காதலிக்கும் படியும், தனது ஆசைக்கு இணங்குமாறும் தொந்தரவு செய்துள்ளார். இதற்கு மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த விஜயகுமார் மாணவியின் கழுத்தில் கத்தியால் அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதில் படுகாயமடைந்த மாணவி ரத்தம் சொட்ட சொட்ட வீட்டிற்கு சென்று தனது தந்தையிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளார். உடனடியாக மாணவி ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் விஜயகுமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |