காதலிக்க மறுத்த மாணவியை மிரட்டிய ஊர்க்காவல் படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள தேக்கம்பட்டி அறிவழகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சேலம் மாநகர ஊர்க்காவல் படையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அறிவழகன் அதே பகுதியில் வசிக்கும் 11-ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். அந்த மாணவி காதலை ஏற்கவில்லை. இதனால் கடந்த 7-ஆம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவியிடம் அறிவழகன் தகராறு செய்து தன்னை காதலிக்கும் படி மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து மாணவி தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாணவியின் தாயார் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்த போலீசார் அறிவழகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.