Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காதலிக்க மறுத்த மாணவி…. கடத்தி சென்று துன்புறுத்திய தொழிலாளி…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மோரூர் விநாயகர் கோவில் தெருவில் கட்டிட தொழிலாளியான மணிகண்டன்(28) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு 12-ம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக கூறி தொந்தரவு செய்துள்ளார். மேலும் காதலை ஏற்க மறுத்த மாணவியை மணிகண்டன் கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் மணிகண்டனை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த கோவை நீதிமன்றம் மணிகண்டனுக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.

Categories

Tech |