Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காதலிக்க மறுத்த மாணவி…. தாக்க முயன்ற வாலிபருக்கு கத்திக்குத்து…. போலீஸ் நடவடிக்கை…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்புரத்தில் பெயிண்டரான ஜாபர் அலி(24) என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் 16 வயதுடைய பிளஸ்-டூ மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் தங்களது மகளை கண்டித்து வேறு இடத்திற்கு வீட்டை மாற்றினர். பின்னர் மாணவி ஜாபர் அலியுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து மாணவி தனது தோழிகளுடன் தனியார் பேருந்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அந்த பேருந்தில் ஜாபர் அலியும் இருந்துள்ளார். இதனை அறியாத மாணவி ஜாபர் அலி குறித்து தனது தோழிகளிடம் கருத்து தெரிவித்த போது கோபமடைந்த அவர் மாணவியை தாக்க முயன்றார்.

இதனை பார்த்ததும் பேருந்தில் இருந்த பயணிகள் அவரை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். பின்னர் மாணவியின் தோழிகள் நடந்த சம்பவம் குறித்து மாணவியின் தந்தையிடம் தெரிவித்தனர். இதனால் கோபமடைந்த அவர் ஜாபர் அலியின் வீட்டிற்கு சென்று அவரது முதுகில் கத்தியால் குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த ஜாபர் அலியை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் மாணவியின் தந்தை மீது வழக்குபதிந்து அவரை கைது செய்தனர். பின்னர் மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் ஜாபர் அலி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அவரையும் கைது செய்தனர்.

Categories

Tech |