காதலிக்க மறுத்த பெண் சுத்தியலால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் மண்டலத்தை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் அவரது வீட்டின் அருகே மர்ம நபரால் கொலை செய்யப்பட்டார். காப்பகம் ஒன்றில் பணிபுரிந்து வந்த அந்தப் பெண் தனது வீட்டை விட்டு வெளியே வந்த சமயம் அவரை வழிமறித்த நபர் தான் கொண்டு வந்திருந்த சுத்தியலால் கொடூரமாக தாக்கி உள்ளார். அந்தப் பெண் நிலைகுலைந்து சரிந்த பிறகும் ஆத்திரம் அடங்காத அந்த நபர் தொடர்ந்து தாக்கியுள்ளார்.
இதில் தலை சிதைந்து அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன் பிறகு தான் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தை மற்றும் ஆதாரங்களை மர்ம நபர் அளித்துவிட்டார். சுமார் 10 வருடங்களுக்கு முன்பு அந்த நபரும் கொலை செய்யப்பட்ட பெண்ணும் ஒன்றாக பணியாற்றியது தெரியவந்துள்ளது.
அப்போது முதல் அந்தப் பெண்ணை தான் காதலிப்பதாக கூறி மர்ம நபர் தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஆனால் இறுதிவரை அந்தப் பெண் அவரது காதலை ஏற்கவில்லை இதுவே கொலை செய்ததற்கான காரணம் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கொலை வழக்கு நவம்பர் மாதம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.