Categories
தேசிய செய்திகள்

காதலித்ததால் கொடூர தண்டனை… நிர்வாணமாக்கி நடக்க விட்ட கிராம மக்கள்… அதிர்ச்சி சம்பவம்…!!!

ஜார்கண்ட் மாநிலம் தும்கா என்ற மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் இளம்பெண் ஒருவர் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். அந்த பெண்ணின் கணவர் ஒரு ஆண்டுகளுக்கு முன்பு குற்ற செயலில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் வேலை செய்யும் ஊரைச் சேர்ந்த ஒரு நபருடன் இவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இந்த காதல் குறித்து கிராம மக்களுக்கு தெரிய வந்துள்ளது.

இதையடுத்து இருவரையும் பிடித்த கிராம மக்கள் அவர்களை தாக்கி நிர்வாணப்படுத்தி உள்ளனர். மேலும் அவர்களை நிர்வாணமாகவே தெருவில் நடக்க விட்டு தண்டனை வழங்கியுள்ளனர். இந்த செயல் குறித்து காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று இந்த செயலில் ஈடுபட்ட 50 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |