ஸ்ரீபெரம்பத்தூர் அருகே திருமணம் செய்வதாக கூறி பெண்ணை காதலித்து ஏமாற்றிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்தவர் சீனிவாசன் இவர் ஸ்ரீபெரம்பத்தூர் அருகே உள்ள வல்லக்கோட்டை பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வந்தார். இவரும் ஸ்ரீபெரம்பத்தூர் அடுத்த பெருச்சாப்பாக்கம் பகுதியை சேர்ந்த கல்யாணி என்ற பெண்ணும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அப்போது இருவரும் பல முறை உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சீனிவாசன் கல்யாணியை திருமணம் செய்து கொள்ள மறுத்தார். இச்சம்பவம் குறித்து கல்யாணி தனது வீட்டில் தெரிவித்ததையடுத்து கல்யாணியின் பெற்றோர்கள் ஓரகடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர் சீனிவாசனை கைது செய்தனர்.