செங்கல்பட்டு மாவட்டத்தில் காதலித்து ஏமாற்றிய வாலிபரை மகளிர் காவல் நிலையத்தில் வைத்து பெண் கரம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள புதுவெட்டைகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் கேளம்பாக்கத்திலுள்ள வாடகை வீட்டில் நண்பர்களுடன் தங்கி அங்குள்ள மாத்திரை தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரிவு அலுவலராக பணிபுரிந்து வருகிறார். அப்போது அதேப் பகுதியை சேர்ந்த அந்தோணிசலேரி என்ற பெண்ணுடன் ஒரே நிறுவனத்தில் வேலை செய்து வந்ததால் பழக்கம் ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியுள்ளது. இவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வருவதால் தனிமையில் சந்தித்து காதலை வளர்த்துள்ளனர்.
இந்நிலையில் கோபாலகிருஷ்ணன் ஊருக்கு சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு சென்றவர் பல மாதங்களாகியும் திரும்பி வராததால் சந்தேகமடைந்த அந்தோணிசசேலரி செல்போனை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. மேலும் கோபாலகிருஷ்ணனுக்கு கள்ளக்குறிச்சியை சேர்ந்து ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளதாக அன்தோனிசலேரிக்கு தகவல் கிடைத்ததுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அதிர்ச்சியடைந்த அந்தோணிசலேரி கோபாலகிருஷ்ணன் மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல் துறையினர் கள்ளக்குறிச்சி பகுதிக்கு சென்று கோபாலகிருஷ்ணனை கைது செய்து மாமல்லபுரத்திற்கு அழைத்து வந்து காவல் நிலையத்தில் வைத்து பெற்றோர்களின் முன்னிலையில் கோபாலக்ருஷ்ணன் மற்றும் அந்தோணிசசேலரி இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.