கோவை மாவட்டம் கோட்டூர் அருகே திருமணமான ஒரு வருடத்தில் கர்ப்பிணி பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள தொண்டாமுத்தூர் ஊரை சேர்ந்தவர் குருசாமி இவர் ஒரு கூலித்தொழிலாளி இவரது மனைவி திவ்யா வயது 19. இவர்கள் கடந்த வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் தீபிகா 6 மாத கர்ப்பமாக இருந்தார். சம்பவத்தன்று கணவன் மனைவி இருவரும் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர்.
அதைத்தொடர்ந்து குருசாமி அவர்கள் அவரது மனைவியை அவர்களது வீட்டில் விட்டுவிட்டு மீண்டும் திருமண வீட்டிற்கு சென்றுள்ளார். திருமண நிகழ்ச்சிகள் முடிந்ததும் நள்ளிரவு சமயத்தில் வீட்டிற்கு திரும்பினார். இதனை அவரது மனைவி திவ்யா கண்டித்துள்ளார். பேச்சுப் போக்கில் ஆரம்பித்த இது இருவருக்கும் தகராறாக மாறிவிட்டது.
குருசாமி உடனடியாக தனது மனைவி திவ்யாவை சமாதானம் செய்துவிட்டு தூங்க சென்றார். மறுநாள் காலையில் எழுந்து பார்க்கையில் திவ்யா சாணிப்பவுடரை குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குருசாமி அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். எனினும் செல்லும் வழியிலேயே திவ்யா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து கோட்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தும் விசாரணை நடத்தியும் வருகிறார்கள். திருமணமான ஒரு வருடத்திலேயே இச் சம்பவம் நடந்ததால் ஆர்டி ஓ விசாரணை நடந்து வருகிறது. மேலும் இச்சம்பவமானது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.