Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இதுக்கெல்லாம் நீங்கத் தான் காரணம்… மன உளைச்சலில் மனைவி எடுத்த விபரீத முடிவு… தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி தகவல்….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் காதலித்து திருமணம் செய்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பிடாரிக்காட்டை பகுதியில் அன்புதமிழன் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அம்மாள்புரத்தைச் சேர்ந்த நிரஞ்சனா என்பவரும் ஆறு மாதங்களுக்கு முன்பு  காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில் நிரஞ்சனா, கணவர் மற்றும் மாமனார், மாமியார் ஆகியோரின் கொடுமை தாங்க முடியாமல் மனமுடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கதினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிரஞ்சனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து நிரஞ்சனாவின் தாய் காவல் நிலையத்தில் எனது மகள் இறப்பிற்கு அவள் கணவர் குடும்பம் தான் கரணம் என்று புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல் துறையினர் தற்கொலைக்கு காரணமான அன்புதமிழ் குடும்பம் மீது வழக்குப்பதிவு  செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |