Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

காதலித்து 2-வது திருமணம் செய்த நபர்…. ரூ.40 லட்சம் மோசடி…. பெண்ணின் பரபரப்பு புகார்…!!!

திருவாரூர் மாவட்டத்திலுள்ள வேளாங்குடி பகுதியில் வசிக்கும் 31 வயதுடைய பெண் காந்திபுரத்தில் இருக்கும் மத்திய மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் பட்டப்படிப்பை படித்து முடித்துவிட்டு கோவையில் இருக்கும் தனியார் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் அரசு வேலைக்காக பயிற்சி பெற்று வந்தபோது செல்போன் கடையில் வேலை பார்க்கும் அப்துல் ரஹீம்(34) என்பருடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டோம். தற்போது நான் 7 மாத கர்ப்பிணியாக இருக்கிறேன். இந்நிலையில் எனது கணவர் சொந்தமாக தொழில் செய்யப்போவதாகவும், அதற்கு பணம் தேவைப்படும் எனவும் கூறினார். அதனை நம்பி 40 லட்சம் ரூபாய் பணம், 4 1/2 பவுன் தங்க சங்கிலி, வைர மோதிரம் ஆகியவற்றை அப்துலிடம் கொடுத்தேன்.

ஆனால் தொழில் தொடங்காமல் அப்துல் புதிய வீடு வாங்கியதால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. கடந்த மே மாதம் கணவரின் செல்போனை பார்த்த போது வேறு ஒரு பெண்ணுடன் அவர் பலமுறை பேசியது தெரியவந்தது. இதனையடுத்து விசாரித்ததில், அந்த பெண் அவருடைய முதல் மனைவி என்பதும், அவர்களுக்கு திருமணமாகி 4 வயதில் மகன் இருப்பதும் தெரியவந்தது. பின்னர் அப்துல் வெளிநாட்டிற்கு தப்பி சென்றுவிட்டார் எனவே முதல் திருமணத்தை மறைத்து என்னை காதலித்து 2-வதாக திருமணம் செய்து பணத்தை மோசடி செய்த அப்துல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் அப்துல் மீது வழக்குபதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |