சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பந்தல்குடி பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 23 வயது உடைய தாமரைச்செல்வன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளம் பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியை காதலிப்பதாக தாமரைச்செல்வன் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.
அதன்பிறகு தாமரைச்செல்வன் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பெயரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தாமரைசெல்வனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.