சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கல்லூரி மாணவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள மஞ்ச நாயக்கன்பட்டி கிராமத்தில் சூர்யா(21) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சூர்யா அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து அந்த சிறுமியை கடத்தி சென்று சூர்யா பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருக்கும் சூர்யாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.