சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டத்திலுள்ள திருமானூர் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகன்ராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் ஒரு தனியார் நிறுவன விடுதியில் வார்டனாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மோகன்ராஜ் 14 வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மோகன்ராஜ் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்து சிறுமி மோகன்ராஜை திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் சிறுமி இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோகன்ராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.