வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தலையாமங்கலம் பைங்காட்டூர் ஆற்றங்கரை தெருவில் ஆனந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹோட்டலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஆனந்தகுமார் 15 வயதுடைய 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் மன்னார்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ஆனந்த குமாரை கைது செய்தனர்.