Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

காதலிப்பதாக கூறிய வாலிபர்…. சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெற்றோரின் பரபரப்பு புகார்…!!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள மீன்சுருட்டி காலனி தெருவில் தீபன்ராஜ்(19) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் ஜெயம்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் தீபன்ராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |