சிறுமியை கற்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்திலுள்ள கோக்குடி கிராமத்தில் ஜெபஸ்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி ஜெபஸ்டியன் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.
இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜெபஸ்டியனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.