சென்னை காவலர் குடியிருப்பில் பாண்டியராஜன் (50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இதனிடையே இவருக்கும் வில்லிவாக்கத்தை சேர்ந்த கணவனைப் பிரிந்து வாழும் ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் காதலாக மாறிய நிலையில் கடந்த பத்து வருடங்களாக இருவரும் தொடர்பில் இருந்து வந்துள்ளனர்.
ஏற்கனவே அந்தப் பெண்ணுக்கு ஒரு மகள் இருக்கிறார். இதனிடையே காதலியை சந்திக்க அவரது வீட்டுக்கு வரும்போது காதலியின் 13 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். காதலி வீட்டில் இல்லாத சமயத்தில் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக அதனைப் போலவே பாலியல் தொல்லையில் ஈடுபட்டு வந்த நிலையில் சிறுமிக்கு தற்போது 20 வயதாகிறது.
இந்நிலையில் அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்து விட்டது.ஆனால் தனது தாய் வீட்டுக்கு வரும்போது எல்லாம் அந்த பெண்ணுக்கு மீண்டும் பாண்டியராஜ் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனை தாங்க முடியாத காதலி தனது மகளுடன் சேர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அந்த பெண்ணுக்கு பாண்டியராஜ் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தது உறுதி செய்யப்பட்டது.இதனைத் தொடர்ந்து பாண்டியராஜை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.