காதலின் வீட்டிற்கு தீ வைத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருக்கோகர்ணம் பகுதியில் மனோகர் பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் 31 வயதுடைய பெண்ணை காதலித்து வந்துள்ளார். மேலும் திருமணம் செய்யாமல் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனோகர் பாண்டி தனது காதலியை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.
நேற்று முன்தினம் காதலி தங்கியிருந்த வீட்டிற்கு மனோகர் பாண்டி தீ வைத்தார். இதனால் வீட்டிலிருந்த மெத்தை, டிவி உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மனோகர் பாண்டியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.