காளிதாஸ் தனது காதலியுடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்ததற்கு நடிகைகள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.
பாவ கதைகள் என்ற வெப் தொடரில் தங்கம் என்ற கதையில் சதார் என்ற திருநங்கையாக நடித்து அசத்தினார் காளிதாஸ் ஜெயராம். இந்த தொடரின் மூலம் அவருக்கு நல்ல நடிகர் என்ற பெயர் கிடைத்தது. இதன் பின்னர் லோகேஷ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற விக்ரம் திரைப்படத்தில் கமலின் மகனாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் காளிதாஸ். இதையடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் அண்மையில் வெளியான நட்சத்திரம் நகர்கின்றது திரைப்படத்திலும் இவரின் நடிப்பு அனைவரின் கவனத்தையும் பெற்றது.
இந்நிலையில் காளிதாஸ் ஜெயராம் தனது இன்ஸ்டால் பக்கத்தில் நடிகை தாரணி காளிங்கராயருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இதற்கு நடிகைகளான கல்யாணி பிரியதர்ஷன், நமீதா, காயத்ரி, சஞ்சனா பாலமுரளி, மாளவிகா உள்ளிட்ட பலரும் வாழ்த்து கூறியுள்ளார்கள். இதற்கு முன்னதாக ஓணம் பண்டிகையின் போது காளிதாஸ் தனது குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அந்தப் புகைப்படத்தில் தாரணியும் இருந்தார். இதனால் காளிதாஸூம் தாரணியும் காதலிப்பதாக கிசுகிசுக்கட்ட நிலையில் தற்போது இருவரும் காதலிப்பது உறுதியாகி இருக்கின்றது.
https://www.instagram.com/p/CjaTzwzoedY/?utm_source=ig_embed&ig_rid=360b5316-3646-454a-abc3-aa8f2e19d5dd