டேட்டிங்கில் காதலி வைத்த செலவினால் சொல்லாமல் காதலன் ஓடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சீனாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் காதலியை டேட்டிங் வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். அதற்கு அந்தப் பெண் முழு செலவையும் ஏற்றுக் கொண்டால் வருவதாக தெரிவித்துள்ளார். இதற்கு இளைஞர் சம்மதம் தெரிவித்து விடுதி ஒன்றில் காத்துக் கொண்டிருந்தார். அப்போது அந்தப் பெண் தனது குடும்ப உறுப்பினர் உட்பட 23 பேர் உடன் உணவு விடுதிக்கு வந்து இளைஞருக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார்.
அதோடு இளம் பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் 2 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய்க்கு சாப்பிட்டுள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இளைஞர் அங்கிருந்து சென்று விட்டார். இதனால் செய்வதறியாது நின்ற இளம்பெண் இளைஞரை தொடர்புகொண்டு கட்டணத்தை பகிர்ந்து கொடுக்கலாம் என்று கூறியுள்ளார். இதன்பிறகு பிரச்சினைத் தீர்வுக்கு வந்துள்ளது.