காதலன் ஏமாற்றியதால் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கற்பகச்செல்வி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் கற்பகச்செல்விக்கும் கரைவளந்தான்பட்டியை சேர்ந்த வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து கற்பகச்செல்வி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை கேட்ட கற்பகச்செல்வியின் பெற்றோர் அந்த வாலிபரிடம் முறைப்படி வந்து பெண் கேட்குமாறு கூறியுள்ளார்.
இந்நிலையில் வாலிபர் வராததால் மன உளைச்சலில் இருந்த கற்பகச்செல்வி தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கற்பகச்செல்வியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.