சஹோ படத்தை இயக்கி பிரபலமான டைரக்டர் சுஜித்க்கு திருமணம் நடைபெற்றது.
தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபாஸ் நடித்த சகோ படத்தை இயக்கி பிரபலமானவர் சுஜித். மெகா பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இருந்ததாக பாராட்டுகளை பெற்றிருந்தார். ஷ்ரத்தா கபூர், சர்வானந்த் நடித்த ராஜா ராணி என்ற படத்தையும் இயக்கியுள்ளார். இதையடுத்து மலையாளத்தில் வெற்றிபெற்ற லூசிபர் படத்தை சிரஞ்சீவி நடிக்க தெலுங்கில் ரீமேக் செய்து இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.
சுஜித் சில வருடங்களாக வள்ளி என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்களின் காதலுக்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைத்தது. எனவே கொரோனா ஊரடங்கில் ஹைதராபாத்தில் சுஜித்-வள்ளி திருமணம் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டு வாழ்த்தி உள்ளார்கள். வள்ளி பல் மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.