Categories
குத்து சண்டை விளையாட்டு

காதலியை கரம் பிடித்த ஜான் சினா….. திருமண சான்றிதழை வெளியிட்ட ஊடகம்…!!

பிரபல குத்துச்சண்டை வீரர் ஜான் சினா தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார்

நேற்று WWE பிரபலம் ஜான் சினா தனது காதலியான ஷே ஷரியாத்சாதேயை ரகசிய திருமணம் செய்து கொண்டார். இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்றாலும் அமெரிக்க ஊடகங்கள் அவ்விருவரின் திருமண சான்றிதழை வெளியிட்டுள்ளனர். ஜான் சினா முன்னாள் மனைவி பிரிந்த பிறகு ஷே ஷரியாத்சாதேவுடன் பழகியுள்ளார்.ஒரு வருடத்திற்கு மேலாக இவர்கள் காதலித்து வந்த நிலையில் நேற்று திருமணம் செய்து கொண்டனர்.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் திருமண சான்றிதழுக்காக நிச்சயதார்த்தம் முடித்து விண்ணப்பித்து இருந்ததாகக் கூறப்படுகிறது. ஈரானில் பிறந்த ஷே ஷரியாத்சாதே கனடா குடியுரிமை பெற்றவர் 31 வயதான இவர் வான்கூவரில் இருக்கும் தொழில்நுட்ப நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகின்றார். பிளையிங் வித் ஃபயர் படத்தின் படப்பிடிப்பில் ஜான் சினா இருந்த போது இவர்கள் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |