நண்பரை கத்தியால் வெட்டிய குற்றத்திற்காக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி சர்மா நகர் 6-வது தெருவில் சிவா(26) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு எலக்ட்ரீசியனான பிரதீப்குமார்(24) என்ற நண்பர் உள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பிரதீப்குமாரின் காதலியை சிவா கிண்டல் செய்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் கோபமடைந்த பிரதீப்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சிவாவின் கை மற்றும் தலையில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் படுகாயமடைந்த சிவாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிரசு அளிக்கப்பட்டு வருகிறது.இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பிரதீப் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்