குஜராத் மாநிலத்தை சேர்ந்த அபிஜித் என்ற நபருக்கும் மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஷில்பா என்ற பெண்ணுக்கும் சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் நட்பாக பழகி வந்த நிலையில் நாளடைவில் இது காதலாக மாறியது. இருவரும் பேசி வந்த நிலையில் அபிஜித் பிசினஸ் பார்ட்னர் ஒருவருடன் ஷில்பா நெருகமாக பழகத் தொடங்கியுள்ளார். ஷில்பா இருவரிடமும் நைசாத ஆசை வார்த்தைகளை பேசி 12 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்ற முயன்றுள்ளார்.
இவரின் மோசடி வேலை அபிஜித் மற்றும் அவரின் கூட்டாளிக்கு தெரிய வந்த நிலையில் பெண்ணை கொலை செய்ய அபிஜித் திட்டமிட்டுள்ளார். ஜபல்பூர் வந்த அபிஜித் அங்குள்ள தனியார் விடுதியில் ரூம் எடுத்து தங்கி ஷில்பாவை வரவழைத்துள்ளார். அங்கு வந்த சில்பாவை கழுத்தறுத்து கொலை செய்து ரத்த வெள்ளத்தில் துடிக்கும் வீடியோ எடுத்த அபிஜித் தன்னை ஏமாற்றுவதற்காக தான் இந்த தண்டனை செய்தேன் என வாக்குமூலம் கொடுத்துள்ளார். அது மட்டும் அல்லாமல் அந்த வீடியோவை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நிலையில் சமூக வலைத்தளத்தில் அது வைரலாக பரவி வருகிறது.