பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜாகுமார், திருப்பூரில் தங்கி கட்டிட வேலை செய்து வந்துள்ளார். அவர் விஸ்வகர்மா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இருவரும் வாட்ஸ்அப் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது . இதையடுத்து காதலியே பயமுறுத்தும் வகையில் விளையாட்டாக நான் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொள்ள போகிறேன் என்று கூறியுள்ளளார். அப்போது திடீரென கயிறு கழுத்தை இறுகியதால் ராஜாகுமார் சம்பவ இடத்திலே மூச்சித்திணறி பரிதாமாக உயிரிழந்தார்.
இதனை வீடியோவில் காலில் பார்த்துக்கொண்டிருந்த காதலி அதிர்ச்சி அடைந்து உடனே போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராஜாகுமார் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.