வாலிபரை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மசாபூர் என்ற கிராமத்தில் அங்கித் என்ற வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணை அங்கித் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அங்கித் தன்னுடைய காதலியை சந்திப்பதற்காக அவருடைய வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வாலிபரை வீட்டிற்குள் அடைத்து வைத்து அவர் மீது பெட்ரோலை ஊற்றி உயிருடன் எரித்துள்ளனர்.
அதன் பிறகு இளம் பெண்ணின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் வாலிபர் தங்கள் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசி விட்டதாக கூறி கூச்சலிட்டுள்ளனர். இந்த சத்தத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் உடனடியாக வாலிபரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் காவல்துறையினர் பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் எரிந்த நிலையில் வாலிபர் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.