உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அசங்கர் மாவட்டத்தை சேர்ந்த பிரின்ஸ் யாதவ் என்பவர் இஷாத்பூர் கிராமத்தை சேர்ந்த ஆராதனா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனிடையே அந்தப் பெண் திடீரென வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணத்திற்கு பிறகும் காதலருடன் தொடர்பில் இருந்துள்ளார். திருமணத்திற்கு பிறகும் தன்னுடன் பழகி வந்தாலும் தன்னை விட்டு இன்னொருவரை திருமணம் செய்து கொண்டதால் மிகுந்த ஆத்திரத்தில் இருந்து வந்த பிரின்ஸ் கடந்த நவம்பர் ஒன்பதாம் தேதி ஆராதனாவை கோவிலுக்கு செல்லலாம் என பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார்.
அதன் பிறகு அவரின் நண்பர் சர்வேசியின் உதவியுடன் கரும்பு தோட்டத்திற்குள் அந்த பெண்ணை தூக்கிச் சென்று கொலை செய்துள்ளார். மேலும் கழுத்தை நெறித்து கொலை செய்து ஆறு துண்டுகளாக வெட்டி கிணற்றில் வீசிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.