காதல் வலையில் இருந்து தப்பிப்பதற்கான வழிமுறைகள் குறித்து மாணவிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வண்ணார்பேட்டையில் இருக்கும் தனியார் கல்லூரியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் குழந்தை இல்லங்களில் உள்ள மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தில் உள்ள 60-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் ஆய்வாளர் பெருமாள் தலைமை தாங்கினார்.
இந்த மாணவிகளுக்கு உயர் கல்வியை எப்படி தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து அறிவுரை வழங்கப்பட்டது. இதனையடுத்து காதலில் சிக்காமல் படிப்பில் கவனம் செலுத்துவது எப்படி என்பது குறித்தும் அறிவுரை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக மாணவிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தை நல அலுவலர் அருள்செல்வி, குழந்தைகள் நலக்குழு தலைவர் சந்தனக்குமார், கல்லூரி முதல்வர் வேல்முருகன், பாதுகாப்பு அலுவலர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.