Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

காதலில் வீழ்த்திய திருமணமான பெண்… பார்க்காமலே காதல்….” காதலி வீட்டில் தூக்கில் தொங்கிய இளைஞன்”..!!

21 வயது இளைஞர் ஒருவர் yoyo  என்ற செயலி மூலம் ஒரு பெண்ணை காதலித்துள்ளார். அந்த பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது என்பது தெரிந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அம்ரின்  என்ற பெண் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பாளையம் என்ற பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. பூபதி என்ற நபர் சென்னை தாம்பரம் சேலையூர் பகுதியை சேர்ந்தவர். இவருக்கு வயது 21. தனியார் பள்ளியில் வேன் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். பூபதிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் யோயோ என்ற செயலி மூலம் அம்ரின் மற்றும் பூபதிக்கு காதல் ஏற்பட்டுள்ளது.

திருமணமாகாத பூபதியிடம் தான் ஒரு கல்லூரி மாணவி என்றும், தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும் கூறியுள்ளார். இதை முழுமையாக நம்பிய பூபதி கடந்த 8 மாதங்களாக யோயோ செயலி மூலம் அவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அம்ரின் கணவர் வேலை காரணமாக வெளியூர் சென்றிருந்த சமயம் பார்த்து பூபதியை தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். அப்போதுதான் அவனுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது அவருக்கு தெரியவந்தது.

வீட்டிற்கு வந்த பூபதி இதனை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பூபதி மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போன அம்ரின் வேறு வழியில்லாமல் புதுப்பாளையம் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார் . சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பூபதியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர் . மேலும் அவரை திருமணம் செய்ய எடுத்து வந்த மஞ்சள் தாலி மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |