Categories
உலக செய்திகள்

காதலி சொல்லிடுச்சு…! முடிவு எடுத்த புதின்… அதிபர் பதவி வேண்டாம்… உண்மை என்ன ?

புடின் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்ய போவதாக வெளியான தகவலுக்கு அதிபர் மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பார்க்கின்சன் நோயால் அவதியுற்று வருவதால், தன் காதலி Alina Kabeava மற்றும் அவரது மகள்களின் வற்புறுத்தலின் பேரில் அதிபர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்திருக்கிறார் என்று அரசியல் விமர்சகரான பேராசிரியர் Valery Solovei தெரிவித்திருந்தார். ஆனால் இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்த கிரெம்ளின் செய்தித் தொடர்பாளரும், துணை Chief of staff என்ற பதவி வகிப்பவருமான Dimitry Peskov, புடின் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார்.

மேலும் அவருக்கு பார்க்கின்சன் பிரச்சினை நோய் இருக்கிறது என்று solovei கூறியது முட்டாள்தனமான செயல் என்றும், அவருக்கு பார்கின்சன் நோய் இல்லை என்றும் கூறியுள்ளார். இனிவரும் காலங்களிலும் புடினுக்கு பதவி விலகும் திட்டம் கொஞ்சம் கூட இல்லை என்றார்.

Categories

Tech |