காதலி பேசாமல் இருந்த காரணத்தினால் மனம் உடைந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் கிராமத்தில் நிதிஷ்குமார் என்ற வாலிபர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இந்த காரணத்தினால் நிதீஷ்குமாரிடம் அந்த பெண் பேசாமல் இருந்துள்ளார். இதனால் மனமுடைந்த நிதிஷ்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து நிதிஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் போலீசார் வழக்கு பதிந்து நிதீஷ்குமாரின் இறப்பு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.