சென்னை வண்ணாரப்பேட்டையில் சஞ்சீவிராயன் கோவில் தெருவில் விக்னேஷ் என்பவர் வசித்துவருகிறார். இவர் 10 வருடங்களாக வண்ணாரப்பேட்டையில் உள்ள ஸ்டூடியோவில் வேலை பார்த்து வருகிறார்.நேற்று இரவு விக்னேஷ் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு ஸ்டுடியோவுக்கு சென்றுள்ளார். அதன் பிறகு காலையில் ஸ்டூடியோவை திறந்து பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்ததை பார்த்த சக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் விக்னேஷ் உடலையும் மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பிறகு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண் திடீரென அவரிடம் பேச மறுத்ததால் விக்னேஷ் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால்தான் விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.