செனிகல் நாட்டை சேர்ந்த காதீம் மோப்அப் (22) அதே பகுதியை சேர்ந்த கேங்க்யூப் டியோயம் (19) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண் கேஸ்டான் பெர்கர் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இந்நிலையில் பல்கலைக்கழக தேர்வை எழுத கேங்க்யூய் பயந்து, காதீமிடம் தெரிவித்துள்ளார். இதனால் கேங்க்யூய்க்கு பதிலாக காதீம் பெண் வேடத்தில் சென்று தேர்வை எழுத முடிவு செய்தார். அதற்காக பெண் வேடமிட்டு தேர்வறைக்கு சென்றுள்ளார்.
அங்கு தேர்வு கண்காணிப்பாளர் இவரை பார்த்ததும் சந்தேகமடைந்து விசாரித்துள்ளார். அப்பொழுது தான் இருவரின் சதி திட்டமும் தெரியவந்தது. பின்னர் போலீசார் இருவரையும் கைது செய்தனர். மேலும் கேங்க்யூய் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத முடியாதபடி அந்நாட்டு பல்கலைகழக தேர்வாணையம் தடை விதித்துள்ளது.